K2-18b கிரகத்தில் உயிரினங்கள் அறிகுறிகள் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் சாதனை!
Sep 10, 2025, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

K2-18b கிரகத்தில் உயிரினங்கள் அறிகுறிகள் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் சாதனை!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 08:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதல் முறையாக K2-18b எனப்படும் தொலைதூர கிரகத்தில், உயிர்கள் வாழ்வதற்குச்     சாத்தியமான அறிகுறிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, பூமியில் வாழும் உயிரினங்களால் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் இரண்டு அரியவகை ரசாயனங்களை K2-18b கிரகத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என்பது, உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த சுற்றுப்பாதை விண்வெளி தொலைநோக்கி ஆகும். நமது பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்க உதவும் ஒரு ‘கால இயந்திரம்’ இது என்றால் மிகையில்லை.

இந்த தொலைநோக்கி, சுமார்  100-200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி, 13.5 பில்லியின் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் பிறந்த முதல் விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கும் திறன் கொண்டதாகும்.

நட்சத்திரங்கள், வெளிக்கோள்கள் மற்றும் நமது சூரிய மண்டலத்தின் நிலவுகள் மற்றும் கோள்களின் மூலங்களைக் கண்காணிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் இந்த தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் தான்,  ஒரு தொலைதூர  கிரகத்தில்  உயிர் இருக்கலாம் என்று நாசா கண்டு பிடித்துள்ளது.  K2-18 b என்னும் கிரகம் நமது பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கிரகம் 2015 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப் பட்டது.

K2-18b பூமியை விடப் பெரியதாகவும் ஆனால் நெப்டியூனை விடச் சிறியதாகவும் இருப்பதால் ‘சூப்பர் எர்த்’ என்று அழைக்கப்படுகிறது. சிம்ம நட்சத்திர கூட்டத்தைச் சேர்ந்த இந்த கிரகம், பூமியை விட எட்டு மடங்கு நிறை கொண்டதாகும். மேலும், பூமியின் ஆரத்தை விட 2.6 மடங்கு ஆரம் கொண்டதாகும்.

DMS  எனப்படும்  டைமெத்தில் சல்பைடு  மூலக்கூறை இந்த கிரகத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.  DMS பூமியில் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் வேதியல் பொருளாகும்.

K2-18b கிரகத்தின்  உட்புறத்தில்  உயர் அழுத்தப் பனிக்கட்டி இருக்கலாம் என்றும், மேற்புறத்தில் மெல்லிய ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலம் மற்றும் கடல் இருக்கலாம் என்று உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் நட்சத்திர ஒளியின் ஒரு பகுதியை உறிஞ்சுகின்றன, ஆனால் ஒவ்வொன்றும் ஒளியின் நிறமாலையில் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச் செல்கின்றன.  அதன் மூலமே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலமும் நீர் பெருங்கடல்களும் கொண்ட ஒரு பாறை கிரகத்தை ‘ஹைசியன்’ உலகம் என்று விஞ்ஞானிகள் சொல்வார்கள். பொதுவாக, ஹைசியன் உலகங்கள் தண்ணீரால் மூடப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும், புதிய கிரகம் வெப்பமாக இருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது.

ஏற்கெனவே, 2019 ஆம் ஆண்டில், ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி இந்த கிரகத்தின்  வளிமண்டலத்தில்   நீராவியைக் கண்டறிந்ததது.  அப்போதே இது நமது சூரிய மண்டலத்துக்கு வெளியே மனிதர்கள் வாழக் கூடிய உலகம் இருப்பதாக உறுதிப் படுத்தபட்டது.

2023ம் ஆண்டில், இதே தொலைதூர கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு CO2 இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.

K2-18b கிரகத்தில் DMS இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதன் இருப்பை உறுதிப்படுத்தக் கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.  அந்த முடிவுகள் இன்னும் 12 மாதங்களுக்குள் இது உறுதி செய்யப்படும் என்றும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொலைதூர நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கோளில், DMS அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

Tags: Scientists discover signs of life on planet K2-18b: AchievementK2-18b கிரகத்தில் உயிரினங்கள்விஞ்ஞானிகள் சாதனை
ShareTweetSendShare
Previous Post

கோபாலபுரம் தொழில்துறை கொள்கை – அண்ணாமலை விமர்சனம்!

Next Post

சென்னையில் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை தொடக்கம்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies