பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், பெண்களுக்கு உரிமை தருவதாகக் கூறிவிட்டு அவர்களை திமுக அமைச்சர்கள் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கேலி செய்யும் விதமாக அமைச்சர்கள் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.