மாணவர் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவைச் செயல்படுத்தாவிட்டால், வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மேலும், வரும் 30-ம் தேதிக்குள் அங்குப் பயிலும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களின் சட்டவிரோத செயல்பாடுகள், வன்முறைச் செயல்கள் ஆகியவை குறித்த முழு விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மாணவர்கள் அரசியல் சார்பு செயல்களில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த தவறியதற்காக ஹார்வர்டு பல்கலைக்கான 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவியை அமெரிக்க அரசு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.