அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மீது அதிபர் டிரம்ப் நடத்தும் நிர்வாக தாக்குதல்களைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்துவதைத் தொடர்ந்து, வெளிநாட்டு மாணவர்களின் பக்கம் டிரம்ப் நிர்வாகம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.
இதனால் பல்கலைக்கழகங்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதற்கு எதிராகச் சமீபத்தில் ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஹார்வர்ட் நாட்டின் அவமானம் என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.