சென்னையில் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று தொடங்கியது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த குளிர்சாதன வசதி கொண்ட ரயில் இயக்கப்படுகிறது. இதன் முதல் சேவை காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தானியங்கி கதவுகள், சிசிடிவி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இதில் அமைந்துள்ளன.
கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்வதற்கு இந்த ரயிலில் 105 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், குறைந்தபட்ச கட்டணமாக 35 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 பெட்டிகள் கொண்ட ரயிலாக இந்த குளிர்சதான ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.