மதுரையில் சொத்துக்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்கப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரை பி.பி.குளம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்ற தொழிலதிபர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி கடத்தப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தல்லாகுளம் போலீசார், சுந்தரத்தை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
தொடர்ந்து பாண்டி கோயில் அருகே சுந்தரம் இருப்பதாக தகவலறிந்த போலீசார், அங்கு சென்று அவரை மீட்டனர். அப்போது சுந்தரத்தை கடத்திய இருவரும் தப்பியோட முயன்றதாகவும் அப்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.