திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியில் பாஜகவின் வேலூர் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவருக்கு நடராஜர் சிலை, வேல் மற்றும் வீரவாள் வழங்கியும் கெளரவித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியை அகற்றும் நோக்கில் அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும், 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என சூளுரைத்த நயினார் நாகேந்திரன், பாஜகவிலிருந்து அதிக எம்எல்ஏக்கள் சட்டமன்றம் செல்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.