ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. திடீரென மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை நின்றதையடுத்து சுமார் 2 மணிநேரம் தாமதாக டாஸ் போடப்பட்டது. இதனையடுத்து ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இறுதியில், இறுதியில் பஞ்சாப் அணி 12 புள்ளி 1 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.