பாதுகாப்புத்துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பை அவுரங்காபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 2014-ம் ஆண்டு 600 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி, 2024-ல், 24 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறினார்.
ஏற்றுமதியை 2029-30ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறிய ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.