2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் UPI பணப் பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 21 லட்சம் கோடி ரூபாயாக இருந்த UPI பணப்பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 260 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய நிதியமைச்சகம், தற்போது அந்த திட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.