அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு மத்தியில் நியூயார்க்கில் சர்வதேச கார் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி விதிப்பு முறையை கொண்டு வந்தார். அதன் அடிப்படியில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த வர்த்தகப் போருக்கு மத்தியில் நியூயார்க்கில் சர்வதேச கார் கண்காட்சி நடைபெற்றது.
இதில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஏராளமான கார்கள் இடம் பெற்றன. Volkswagen, Nissan, Ford, Hyundai, Audi, Toyota உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வண்ண மயமான கார்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.