கூலி உயர்வு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட விசைத்தறியாளர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
கூலி உயர்வு கோரி கோவை சோமனூரில் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்தாவது நாளாக உண்ணா விரதம் தொடரும் நிலையில், போராட்டக்காரர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அதில் இருவரின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மோசமாக இருந்ததால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் மீண்டும் உண்ணாவிரத பந்தலுக்கு திரும்பி போராட்டத்தை தொடர்ந்தனர்.