சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி பணிகளை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள், மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் தங்களை கொத்தடிமை போல் நடத்துவதாகவும் தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.