சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தை ஒட்டி பாஜக சார்பில் அவரது உருவப்படத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் மரியாதை செலுத்தினார்.