கடலூரில் அதிமுகவினர் அமைத்த ஆர்ப்பாட்ட மேடையை காவல்துறையினர் அகற்ற முயன்றதால் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
இதற்காக ஆர்ப்பாட்ட மேடையை அக்கட்சியினர் அமைத்து இருந்தனர். இதனையறிந்த காவல்துறையினர் விதிகளை மீறி மேடை அமைக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை அகற்ற முயன்றனர்.
அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர், பாலக்கரை ரவுண்டானாவில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மேடை அமைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்த நிலையில் சாலை மறியலை அதிமுகவினர் கைவிட்டனர்.