ஹைதராபாத்தில் குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு மகன்களை வெட்டி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிடி மெட்லா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தேஜா என்ற பெண் தனது இருமகன்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக தேஜா தனது இரு மகன்களையும் வெட்டி கொலை செய்து விட்டு, அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.