திண்டிவனம் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திண்டிவனம் – கிருஷ்ணகிரி இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த கடந்த செப்டம்பர் 3-ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு விரிவான கடிதம் எழுதியிருந்ததாக தெரிவித்துள்ளார்
திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்க்க அதனை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதின் கட்கரி தெரிவித்திருப்பதாகவும் அன்புமணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.