டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. முதிலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது.
ஜாஸ் பட்லர் – ரூதர்ஃபோர்டு இணை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. குறிப்பாக முன்னணி பவுலர் ஸ்டார்க் வீசிய 15 ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை அடித்து பட்லர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிகரமாக சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.