நீதித்துறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக எம்பிக்கள் தெரிவித்த கருத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
நீதித்துறை குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் கருத்துக தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜக எம்பிக்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் நீதித்துறை மற்றும் நாட்டின் தலைமை நீதிபதி குறித்து கூறிய கருத்துகளுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கருத்துகளை பாஜக ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனக் கூறியுள்ள அவர்,பாஜக அவர்களின் கருத்துகளை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து, அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ள ஜெ.பி.நட்டா,நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான வலுவான தூண் என்று பாஜக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.