நாங்குநேரி மாணவர் சின்னதுரை தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னதுரை, கடந்தாண்டு 12ம் வகுப்பு படித்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காயத்தில் இருந்து மீண்டுவந்த அவர், தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகே உள்ள பகுதிக்கு சின்னத்துரை சென்றுள்ளார். அப்போது அவர் தாக்கப்பட்டு செல்போன் பறிக்கபட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சங்கரநாராயணன், சக்திவேல் என்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.