நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய இ-பாஸ் பதிவு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகை மற்றும் கோடை விடுமுறையையொட்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மசினகுடி சோதனைச் சாவடி வழியாக சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். ஆனால், அந்த சோதனை சாவடியில் இ-பாஸ் பதிவு செய்ய வேகமான நெட்வொர்க் இல்லை என கூறப்படுகிறது.
இதனால், ஏற்பட்ட தாமதத்தால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அப்பகுதியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படாததால், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமத்திற்கு ஆளாகினர்.