தெலுங்கானா மாநிலம் ஜனகாம பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியின் கேபின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வரங்கல் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடி கேபின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அங்கு பணியில் இருந்த ஊழியர் காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் காயமடைந்த ஊழியரை உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் லாரியை இயக்கியதால் விபத்து நேரிட்டதாக கூறப்படும் நிலையில், ஓட்டுநரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.