நிலச்சரிவு காரணமாக ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராம்பன் முழுவதும் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசியதுடன், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் , கடைகள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டன. இந்த பேரிடரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையே சோனாமார்க் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் மலையேற்றப் பாதையில் சாலைகளை மூடியபடி பனிச்சரிவும் ஏற்பட்டிருந்தது. இதனையறிந்த அதிகாரிகள் பனிச்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 2 ஜேசிபி வாகனங்களை வரவழைத்த அதிகாரிகள் மலை போல் குவிந்து இருந்த பனியை அகற்றி பாதையை ஏற்படுத்தினர்.