சேலம் கோட்டை பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.இதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் அங்கு கூட தொடங்கினர்.கோவிலுக்கு செல்லும் பிரதான வழித்தடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தடுப்புகள் அமைத்து அழைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் தடுப்புகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து அமைச்சர் வெளியேறியதும் தடுப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விழாவிற்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பக்தர்கள் குற்றம் சாட்டினர்.