திருப்பதி மலைப் பாதையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
திருமலை அடிவாரத்திலிருந்து ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். மலைப் பாதையில் கடைசி கொண்டை ஊசி வளைவில் பயணித்தபோது காரின் முன் பகுதியிலிருந்து கரும்புகை வந்துள்ளது.
இதனை கண்ட ஓட்டுநர் மற்றும் பயணிகள் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பிய நிலையில், கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் மலைப் பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.