மதுரை சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர் பாபு, எ.வ.வேலு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரையில் சித்திரைத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 12ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வை பக்தர்கள் எளிதில் காண்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.