சென்னை தேனாம்பேட்டை டர்ன்புல்ஸ் சந்திப்பு முதல் தேவர் சிலை வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டு, அதற்கு பதிலாக அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு மாறாக சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக வாகனங்கள் செல்கின்றன.