திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை அச்சுறுத்திய தமிழன் பிரசன்னாவின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உருவாக்கப்படும் திட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி, திமுகவினர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத கட்சியாக திமுக உள்ளதாக விமர்சித்துள்ள அவர், நான்கு ஆண்டு காலமாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்களின் தன்மானத்தை சீண்டும் விதமாக திமுக தலைவர்கள் மேடையில் பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள அவர், தொடர்ந்து ஏளனப் பேச்சுக்களைப் பேசும் தனது கட்சிக்காரர்களின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.