"மண் ஆணி" திட்டம் : நிலச்சரிவை தடுக்க புதிய முயற்சி - சிறப்பு தொகுப்பு!
Nov 15, 2025, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“மண் ஆணி” திட்டம் : நிலச்சரிவை தடுக்க புதிய முயற்சி – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Apr 20, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் நிலச்சரிவை தடுக்க மண் ஆணி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைத் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு மலைச் சாலைகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் இந்த சாலைகளில், மழைக் காலங்களில் மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படுவதும், அதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த இன்னல்களை போக்கும் விதமாக மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களில், புதிய தொழில்நுட்பமான “SOIL NAIL” எனப்படும் மண் ஆணியை நெடுஞ்சாலைத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

1973-ம் ஆண்டு பிரான்சில் முதல்முதலாக தொடங்கப்பட்ட இந்த SOIL NAIL திட்டம், அதன் பின் 1976-ல் அமெரிக்கா வரை விரிவடைந்தது. ஏற்கனவே இந்தியாவின் எல்லையோர பகுதிகளான அருணாச்சல பிரதேசம், உத்தராஞ்சலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லி ஐஐடி தொழில்நுட்ப பேராசிரியர்களின் ஆலோசனையின் பேரில் கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆய்வு செய்யப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பம், நீலகிரி மலைப்பகுதிகளில் முதன்முறையாக தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மண்ணின் தன்மை குறித்து முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மண்ணின் பிடிப்பிற்கு தகுந்தவாறு 3 மீட்டர் முதல் 20 மீட்டர் வரையிலான இரும்பு குழாய்கள் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் மூலம் மண்ணுக்குள் பொருத்தப்படுகின்றன. சீரான இடைவெளியில் செலுத்தப்பட்ட இரும்பு குழாய்களுக்குள் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட சிமெண்ட் கலவைகள் ஊற்றப்படுகின்றன.

இது நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் தூண்களைப்போல் செயல்பட்டு, மண்ணின் உறுதித்தன்மையை பலப்படுத்தி மண் அரிப்பை தடுக்க உதவும் விதமாக வடிவமைக்கப்படுகிறது.

தொடர்ந்து மற்றொரு தொழில்நுட்பம் மூலம் அதில் புற்கள் முளைக்க வழிவகை செய்யப்பட்டு, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளில் மட்டுமே கிடைக்கும் ‘HYDRO SEED’ என்ற புல் விதைகள் அதன் மீது தூவப்படுகின்றன. இரண்டு அடுக்குகளாக புற்கள் முளைக்க இடைவெளிவிட்டு கம்பி வலைகள் மூலம் அப்பகுதிகள் மூடப்படுகின்றன.

தொடர்ந்து அப்பகுதியில் தண்ணீர் பாய்ச்சி குறிப்பிட்ட அளவு புற்களை வளரச்செய்வதன் மூலம், அதன் வேர்கள் அடிவரை சென்று மண் ஆணிகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குறிப்பிட்ட பகுதிகளில் மழைநீர் ஊடுருவி வழிந்தோட ஏதுவாக தனித்தனி குழாய்களும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தாலும், மண்ணின் தன்மையாலும் இயல்புநிலைக்கு மாறுபட்ட சூழலை ஏற்படுத்தும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறையினர் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி எந்த அளவிற்கு பலன் தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: soil nail technologysoil erosion.landslideshighway departmentMettupalayam-Kotagiri road
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி மலைப் பாதையில் தீப்பிடித்து எரிந்த கார்!

Next Post

கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளை அமித் ஷா, இபிஎஸ் முடிவு செய்வார்கள் – நயினார் நாகேந்திரன்

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies