ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கோவை விசைத்தறி உரிமையாளர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த மாதம் 19-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது கோரிக்கைகளுக்கு அரசு நடவடிக்கை எடுக்காததால், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, சாமிநாதன் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கூலியை உயர்த்தி தருவதாக உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் விசைத்தறி இயங்க தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.