ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி சார்பில் ஐடேஜா, சிவம் துபே ஆகியோர் அரைசதம் அடித்தனர். 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 15 புள்ளி 4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த நிலையில், 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
பிளே ஆப் சுற்றக்கு முன்னேற வேண்டுமென்றால் அடுத்துள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.