பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டி பஞ்சாப்பில் நடைபெற்றது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 158 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி, 18 புள்ளி 5 ஓவர்களில் 159 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி வாகை சூடியது. விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.