மத்திய பிரதேசத்தில் 77 வயது முதியவரை மருத்துவர் ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தார்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவியை சிகிச்சைக்காக அரசு மருத்தவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவருக்கும், முதியவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் கோபமடைந்த மருத்துவர், முதியவரை அடித்து கீழே தள்ளி இழுத்துச்சென்றுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.