கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழண்டு ஓடியதால் விபத்து ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பிரிதிவிமங்கலம் பகுதியில் சென்றபோது அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழண்டு ஓடியது.
இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.