எதிர்ப்பு இருந்தால்தான் இந்துக்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை ராஜவீதி தேர் நிலைத்திடலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மணி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஹெச்.ராஜா, இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு நாம் சரியான எதிர்வினையாற்ற வேண்டும் என கூறினார்.
1968-ம் ஆண்டு சேலத்தில் ஈ.வெ.ராமசாமிக்கு எதிரான வழக்கு நடந்த போது, இந்துக்கள் அந்த இடத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்களா என்று நீதிமன்றம் கேட்டது. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியதும் அந்தவழக்கை அவருக்கு சாதமாக தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.
மேலும், பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யும் காவல்துறை, பொன்முடி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.