கடலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூரை சேர்ந்த கல்பனா, சரண்யா, நேரு ஆகிய மூவர் கூலி வேலைக்கு செல்வதற்காக ஒன்றாக இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.
கிழக்கு ராமாபுரம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.