கர்நாடக முன்னாள் டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் ஓம் பிரகாஷ், அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், 8 முதல் 10 முறை அவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஓம் பிரகாஷை அவரது மனைவி கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சொத்து பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.