ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் 560 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.