ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய விமானப் படையினர் சாகச ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வானில் பறந்த போர் விமானங்கள், இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வண்ணப் புகையை கக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டன.
தரையிலிருந்து வெறும் 100 அடி உயரத்தில் பறந்த போர் விமானங்களை மக்கள் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.