ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் மறைந்து இருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பூஞ்ச் பகுதியில் உள்ள லசானா வனப் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இந்திய ராணுவத்தின் ரோமியோ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சமீபகாலமாகத் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வந்தாலும், பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டால் அவை தொடர்ந்து தடுக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.