சென்னையில் மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய சிறுவனைக் காப்பாற்றிய இளைஞருக்குப் பாஜக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் சாலைஓரம் சென்றுக்கொண்டிருந்த பள்ளி சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை அவ்வழியாகச் சென்ற இளைஞர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர் எம்.சக்கரவர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அண்ணா நகர் மேற்கு மண்டல பாஜக சார்பில் இளைஞருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.