தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாகக் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வெள்ள கெவி கிராமத்தில் சாலை அமைப்பதற்காகச் சாத்தியக்கூறு குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ள கெவி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பு வெளியானது.
இதன் எதிரொலியாக, இரு தினங்களுக்கு முன்பு கிராம மக்களுக்குத் தேவையான ரேசன் பொருட்களை அதிகாரிகள் இல்லம் தேடி சென்று வழங்கினர். தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக வெள்ள கெவி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதனிடையே, வெள்ள கெவி கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று செய்தி வெளியிட்ட தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குக் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.