திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கிரேன் பெல்ட் அறுந்து விழுந்த ஏற்பட்ட விபத்தில் சிக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
வளையாம்பட்டில் தோல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களைப் புதுப்பிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள ராட்சத இயந்திரத்தை வடமாநிலத்துக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாகக் கிரேன் பெல்ட் அறுந்ததில், ராட்சத இயந்திரம் அங்கிருந்த ஜெய்சங்கர் என்பவர் மீது விழுந்தது.
இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கர் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெய்சங்கர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.