தகவல் தொழில்நுட்பத்துறைக்கு நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என அத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், கூடலூர் தொகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும், தொழில்பூங்காக்களில் சிறு பகுதி மட்டுமே தகவல் தொழில்நுட்பத்துறை வசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதை கேட்டால் கிடைக்கும் எனவும் பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத்தலைவர் அப்பாவு, துறைசார்ந்த பிரச்னைகளை முதலமைச்சரிடம் பேசி தீர்வு காண வேண்டும் என்றும், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாசிட்டிவான பதிலை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.