கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சொகுசு காரில் குட்கா கடத்திய 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது இரண்டு கார்கள் நிற்காமல் வேகமாகச் சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் கார்களை மடக்கிப் பிடித்துச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக 4 பேரைக் கைது செய்தனர்.