கோவை தொண்டாமுத்தூர் அருகே பெட்டிக்கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அங்கம்மாள், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இவரது கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத் துறையினர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கைபற்றியதுடன் கடைக்குச் சீல் வைத்தனர்.
இதனால் மன வேதனையடைந்த அங்கம்மாள், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.