கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையத்தில் உள்ள சித்தி புத்தி சமேத விநாயகர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிறப்பு யாகச் சாலை பூஜைகளுடன் விழா தொடங்கியதையடுத்து, கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.