தமிழகத்தில் கள் தடையை நீக்காவிட்டால் வரும் தேர்தலில் திமுகவை புறக்கணிப்போம் எனத் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் அவர் தலைமையில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இதற்குத் தலைமை தாங்கிய அவர், கள்ளை மதுவிலக்கு சட்டத்திலிருந்து நீக்கி உணவு பொருளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கள் மீதான தடையைத் தமிழக அரசு நீக்காவிட்டால், வரும் தேர்தலில் திமுகவை புறக்கணிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.