மம்முட்டி நடித்துள்ள ‘களம்காவல்’ படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி.
சமீபத்தில் இவரது நடிப்பில் ‘பசூக்கா’ படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து மம்முட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘களம்காவல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.