ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்குத் தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கக் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாகத் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆசிரியர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமெனக் கூறினார்.
அவ்வாறு நிறைவேற்றாவிட்டால், மிகவும் சக்திவாய்ந்த போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.